கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான மதுபானசாலைக்கு மதுவரி திணைக்களம் சீல் வைத்துள்ளது.
வரி செலுத்தாத வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கலால் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் குழுவொன்று அதிரடியாக சோதனை நடத்தி சுமார் நூறு வெளிநாட்டு மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.
விசாரணை முடியும் வரை மதுபானக் கடைக்கு சீல் வைக்குமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்ததை அடுத்து மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.