கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் இன்று புதன்கிழமை (18) கிளிநொச்சி நகர விளையாட்டு மைதான முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் 5,000க்கும் மேற்பட்ட சைகை மொழி பேசுபவர்கள் இருக்கின்ற போதும் அந்த மொழிகள் அங்கீகரிக்கப்படாது இருக்கின்றது.
அவர்கள் அரச தினைக்களங்களிலும் ஏனைய இடங்களிலும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என கோரி பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டார் தொடர்ந்து ஜனாதிபதிக்கான மகஜரும் கையளிக்கட்டது.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த சைகை மொழி பேசுவபவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.