இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு 50 வீதமான கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மட்டுமே ஓரளவுக்கேனும் செயற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், ஏனைய கூட்டுறவு விற்பனை நிலையங்கள் பெயரளவில் இயங்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கிராமப் புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் அதன் காரணமாக கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமான பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாக பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையை மாற்றும் வகையில் அனைத்து கூட்டுறவு விற்பனை நிலையங்களையும் நவீனமயப்படுத்தி, மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.