Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹட்டனை உலுக்கிய விபத்து; விசாரணையில் வெளிவந்த விபத்திற்கான காரணம்

ஹட்டனை உலுக்கிய விபத்து; விசாரணையில் வெளிவந்த விபத்திற்கான காரணம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (21) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த 53 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 43 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விபத்தில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேசமயம் ஹட்டன் – கண்டி பஸ் விபத்தில் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். ராம்மூர்த்தி இன்று (22) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இந்த விபத்தில் கண்டி புறநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் உவைஸ் (68), ஹட்டன் தோட்டப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் தினேஷ்குமார் (14), நோர்வூட் மேற்பிரிவு பகுதியைச் சேர்ந்த முத்துராக்கு (67) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பேருந்து சாரதி தனது கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டே பேருந்தை செலுத்தி சென்றதாகவும், அதனாலேயே பேருந்து சாரதிக்கு பேருத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவரவாளர்களாகவே கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்; அருண் ஹேமச்சந்திரா

ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவரவாளர்களாகவே கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்; அருண் ஹேமச்சந்திரா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு