ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமியால் 2024 ஆம் ஆண்டின் தர உயர்வு மற்றும் எழுத்துப் பரீட்சையானது மட்டக்களப்பில் நடைபெற்றது.
இரு தினங்கள் நடைபெற்ற குறித்த இவ் நிகழ்வானது கடந்த (21) திகதி வெபர் உள்விளையாட்டு அரங்கத்திலும், (22) திகதி ஒந்தாச்சிமடம் பகுதியில் உள்ள மண்டபத்திலும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.
இவ் நிகழ்வு சென்செய் எச்.ஆர்.சில்வா அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இவர் 4வது டான் பிளாக் பெல்ட் பெற்றவரும், ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமியின் தலைவர், தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும் தலைமை தேர்வாளரும் ஆவார்.
இதன் போது விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டிய வீர, வீராங்கனைகளுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், இந்த நிகழ்வில் பெற்றோர்களும் பங்கேற்று தங்கள் பங்களிப்பையும் வழங்கியிருந்தனர்.
அதேசமயம் குறித்த தர உயர்வுக்காக பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு, கழக நிர்வாகிகளும், பிரதான போதனாசிரியர்களுமான R .கௌஷிகன், T .பிரசாத், A.M.A.சிராஜ், R.துஷ்யந்தன், S.துஷ்யந்தி, R.யோகிதா, மற்றும் S .ஜெய பிரகாஷ் ஆகியோர் பயிற்சிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.