Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் நிலவும் சட்ட விரோத காணி அபகரிப்பு;  இரா.சாணக்கியன் கள விஜயம்

மட்டக்களப்பில் நிலவும் சட்ட விரோத காணி அபகரிப்பு; இரா.சாணக்கியன் கள விஜயம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று (24) வாழைச்சேனை பேத்தாழை துறைமுக இறங்கு துறை பகுதிக்கு திடிர் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

துறைமுகப் பகுதியில் நிலவும் சட்ட விரோத காணி அபகரிப்பு தொடர்பாக தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக தெரிவித்து பிரதேச மீனவ அமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியமையினை அடுத்து நிலமைகளை நேரில் கண்டறியும் பொருட்டு வருகை தந்திருந்தார்.

துறைமுகப் பகுதியின் அருகாமையில் உள்ள ஆற்று கரையோர அரச காணி ஒன்றினை மீனவர்கள் தங்களது நாளாந்த போக்குவரத்து மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் மற்றும் படகு நிறுத்தும் செயற்பாட்டிற்கு நீண்டகாலமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

தற்போது இதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சகோதரர்களில் ஒருவர் ஆற்றோடு சேர்த்து வேலிக் கட்டைகள் இட்டு காணியை பாதுகாத்து வருவதுடன் அதனால் செல்வதற்கு தடை ஏற்படுத்தி உள்ளதாகவும் அடைக்கப்பட்ட கட்டைகளை அகற்றி தருமாறும் மீனவ அமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு தெரிவித்தனர்.

சம்பவத்தை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் இவ்வாறான செயற்பாட்டிற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும் இவ்விடயம் தொடர்பான பல்வேறுபட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

ஆற்றங்கரையோடு உள்ள காணிகளின் குறிப்பிட்டளவு பிரதேசம் அரசிற்கு சொந்தமானதாகவும் அவற்றினை தனியார் அபகரிக்கமுடியாது ஆனால் அதனை பராமரிக்கலாமே தவீர வேலி இடவோ,மதில் கட்டவோ முடியாது என்றார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக மீனவ அமைப்பு பிரதிநிதிகளிடம் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை முன்னாள் அரசியல் வாதியின் சகோதரர் அவரது அடியாட்களுக்கும் மீனவர் சிலருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

கடந்த வாரம் குறித்த காணி பிணக்கு தொடர்பாக கரையோர பேணல் திணைக்களத்திற்கு முறைப்பாடு தெரிவித்தனை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை அவதானித்தன் பின்னர் கரையோரத்தில் அடைக்கப்பட்ட கட்டைகள் சிலவற்றை உரியவர் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தங்களிடம் தெரிவித்ததாக மினவ அமைப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால் அதற்கான நடவடிக்கை இது வரை எடுக்கப்படாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சகோதரர் தங்களது காணியின் கட்டைகள் சிலவற்றை மீனவர்கள் சிலர் இரவோடு இரவாக அகற்றியதாக குற்றம் சுமத்தி அவர்களுக்கெதிராக முறைப்பாட்டினை கல்குடா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.

அது தொடர்பான விசாரணையை பொலிசார் முன்னெடுத்து தாம் செய்யாத குற்றச் செயலை செய்ததாக தங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதேவேளை இவ் காணி பிணக்கினை கரையோரல் பேணல் திணைக்களமே மேற்கொள்ள முடியும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

September 16, 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
Next Post
சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதற்கு தடை என்ற தீர்மானத்தில் தாமதம்

சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதற்கு தடை என்ற தீர்மானத்தில் தாமதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.