Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்த பேரவையாக இணைந்து செயல்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அதன் முதல் கட்ட நடவடிக்கையாக இந்திய வெளியுறவு செயலாளரை விரைவில் சந்திக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (31) ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாகச் சந்திக்க உள்ளதாகக் கூறினார். அந்தச் சந்திப்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார தேவைகள் தொடர்பான முக்கிய விடயங்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேநாளில் எதிர்க்கட்சித் தலைவருடனும் சந்திப்பு நடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது அவரைச் சந்தித்து 13ஆவது அரசியலமைப்பு திருத்தம், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல், வடக்கு மற்றும் கிழக்கில் நிலவும் காணி பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அதேவேளை, தமிழக அரசியல் தலைவர்களுடனும் சந்திப்புகளை மேற்கொண்டு, இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அபிவிருத்தி தேவைகள் தொடர்பாக கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

தமிழக மற்றும் இலங்கை மீனவர்களைச் சுற்றியுள்ள பிரச்சினை அரசியல் விவகாரம் மட்டுமல்லாது, இரு நாடுகளின் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய மனிதாபிமான விடயமாகும் என்றும், அதற்கு இருதரப்பு இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலமாக நீடித்த தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், இந்தியாவின் அபிவிருத்தி உதவித் திட்டங்கள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், யுத்தக் காலத்தில் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது தொடர்பான கோரிக்கையையும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
Next Post
மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.