தும்பகல்ல, குடாஓய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
குறித்த நபர் மேலும் சிலருடன் இங்கினியாகல வெவவில் மீன்பிடிக்கச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே, இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தும்பகல்ல பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








