Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த ஊர் என்பதால் புனரமைக்கப்படாத வீதி; வல்வெட்டித்துறை தமிழர்கள் போராட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த ஊர் என்பதால் புனரமைக்கப்படாத வீதி; வல்வெட்டித்துறை தமிழர்கள் போராட்டம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யுத்தம் நிறைவடைந்த இத்தனை வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு அரசாங்கத்தினாலும் புனரமைக்கப்படாத பிரதான வீதியினால் பாதிக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை பிரதேச தமிழர்கள், குறித்த வீதியை விரைவில் புதுப்பிக்குமாறு கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறப்பிடம் வல்வெட்டித்துறை என்பதால் அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீதியை சீரமைக்க எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என வல்வெட்டித்துறை நகரசபைக்கு முன்பாக வார இறுதியில் முன்னெடுக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வீதியின் புனரமைப்பு முந்தைய அனைத்து அரசாங்கங்களாலும் புறக்கணிக்கப்பட்டதாக வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் இராமச்சந்திரன் சுரேன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

கடந்த கால அரசாங்கங்கள் அடுத்த வருடம் என தொடர்ச்சியாக திட்டமிட்டு செயற்பட்டமையால் இந்த வீதி இப்படி இருக்கின்றது.

விடுதலை புலிகளின் தலைவர் பிறந்த மண் என்ற காரணத்திற்காக, AB தர வீதிகளில் இலங்கையில் புனரமைக்கப்படாமல் இருக்கும் ஒரே வீதி இது என்று தான் நான் நினைக்கின்றேன். கடந்த கால இனவாத அரசாங்கங்களால் கைவிடப்பட்ட இந்த வீதியை புனரமைக்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பொன்னாலையில் இருந்து பருத்தித்துறை வரையான வீதி புதுப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தொண்டமானாறு தொடக்கம் பருத்தித்துறை வரையான 12 கிலோ மீற்றர் தூரத்தையாவது உடனடியாக புனரமைக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

மூன்று தசாப்தங்களாக வடக்கில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கில் 90 வீதமான வீதிகளை அரசாங்கம் புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கும் பிரதேசவாசிகள், நோயாளிகளை சரியான நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் வழியில் உயிரிழந்தமைக்கு இவ்வீதி புதுப்பிக்கப்படாமையே காரணமாகும் என வலியுறுத்தியுள்ளனர்.

“எங்கள் வீதி எமக்கு”, “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த ஊர் என்பதால் இனவாத அரசால் நிராகரிக்கப்பட்டதா?”, “புதிய அரசே எமது வீதியை புனரமைத்துத் தா”, “அவசர சிகிச்சைக்காக செல்லும் போதே ஆயுள் முடிகிறதே” போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மக்கள், வல்வெட்டித்துறை மாநகர சபை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த திணைக்களத்திடம் கையளிப்பதற்கான மனு ஒன்றிலும் பொதுமக்களிடம் கைழுத்துப் பெற்றுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
கிளிநொச்சியில் கோர விபத்து; 2 வயது குழந்தை பலி (காணொளி)

கிளிநொச்சியில் கோர விபத்து; 2 வயது குழந்தை பலி (காணொளி)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு