றொஜர் டீ சில்வா தயாரிப்பில் உருவாகியுள்ள “இரு முகம்” எனும் புதிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மட்டக்களப்பில் அமைந்துள்ள YMCA மண்டபத்தில் நேற்று (06) சிறப்பாக இடம்பெற்றது.
மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு, திரைப்படத்தின் பாடல்களை வெளியிடும் வகையில் அமைந்திருந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த இந்த விழாவில், படத்தின் புதிய பாடல்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த இசை வெளியீட்டு விழாவில் “இரு முகம்” திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த திரைப்பட ரசிகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு படத்தின் இசைக்கு ஆதரவளித்தனர்.





























