அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிற பின்னணியைக் கொண்ட இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை பச்சை நிற பின்னணியைக் கொண்ட சுமார் 8,000 இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, மின்சார வாகனங்களுக்கு இந்த பச்சை நிற பின்னணியைக் கொண்ட இலக்கத் தகடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துஷார பெர்னாண்டோ கூறினார்.
இது வர்த்தமானியில் வெளியிடுவதற்காக ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்பதை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.







