Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

40 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லியின் மைத்துனரான பூத களுவா என்பவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (07) அதிகாலை 1.45 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலையுண்டவர் தெஹிவளை ஓபன் பிரதேசத்தில் வசித்துவந்த 46 வயதுடைய நபராவார். இவர் கொஸ் மல்லியுடன் பல வருடங்கள் துபாயில் தங்கியிருந்தவர் என்றும், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு இலங்கை திரும்பியவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் கொண்ட குழுவினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த இவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலையை படோவிட்ட அசங்க கும்பலைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு