ஆசிய அபிவிருத்தி வங்கியின் நன்கொடையில் கடந்த 2020ஆம் ஆண்டு மாகாண சபை நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர் விநியோக வேலைத்திட்டம் உள்ளிட்ட 32 வேலைத்திட்டங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதன் காரணமாக அந்த வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 381 கோடி ரூபா நிதி அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப் பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறுவதன்படி, முறையான நீர்விநியோக வசதி இன்மை, குறித்த இடங்களுக்கு போக்குவரத்துச் செய்ய போக்குவரத்து வழிகள் இன்மை, நிர்மாணிக்கப் பட்டுவரும் கட்டடங்கள் அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் பிரகாரம் அமையாமை உள்ளிட்ட காரணங்களினால் இந்த வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தைகளை நிர்மாணித்தல், விலங்கு கட்டுப்பாட்டு நிலையங்கள், சமுர்த்தி வேலைத்திட் டங்களுக்காக கட்டடங்களை நிர்வகிப்பதற்கான ஒரு நிலையத்தை ஆரம்பித்தல் போன்ற வேலைத்திட்டங்கள் மக்களின் கோரிக்கைகள் இன்றியே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில வேலைத்திட்டங்கள் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயாமலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று மாகாண சபைகளின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான நீர்த்தாங்கிகள், தரை மட்டத்தை கவனத்தில் கொள்ளாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களில் போதுமான கொள்ளளவு இன்மையினால் 25 வரையிலான நீர் வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிர்மாணங்கள் தொடர்பில், இடைநிறுத்தப்பட்ட சகல வேலைத்திட்டங்களும் எவ்வித திட்டமுமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளமையே இவற்றின் பொது பண்புகள் என்று அந்தக் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.