Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு நாவலடியில் சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தோரின் 20 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி (காணொளி)

மட்டக்களப்பு நாவலடியில் சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தோரின் 20 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி (காணொளி)

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சுனாமி அனர்த்தம் இடம் பெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் இடம்பெற்றது.

இலங்கையில் மிக உயரமான சுனாமி நினைவுத்தூபியை கொண்டிருப்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்ததின்போது அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட கிராமம் என்ற நிலையில் உள்ள மட்டக்களப்பு நாவலடி சுனாமி தூபியில் இன்றைய தினம் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

நாவலடி சுனாமி நினைவுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாவலடி சித்திவிநாயகர் ஆலயத்தில் காலையில் விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து சுனாமி நினைவுத்தூபியில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது விசேட ஆத்மசாந்தி பூஜைகள் நடைபெற்றதுடன் உயிர்நீர்த்த உறவுகளினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நாவலடி கடற்கரையில் ஆத்மசாந்திக்காக விசேடபூஜைகள் நடைபெற்று தமது உறவுகளின் ஆதம்சாந்திக்கான வழிபாடுகளும் கிரியைகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் அருட்தந்தையர்களான ஜோசப்மேரி.க.ஜெகதாஸ் அடிகளார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் , முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று மட்டக்களப்பு நாவலடி நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வூர்வுமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு நாவலடி, புதுமுகத்துவாரம் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக சுமார் 1100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇 www.battinaatham.net #Batticaloa #srilanka #sunami

♬ original sound – battinaatham – battinaatham

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
பாசிக்குடா கடற்கரையில் சுனாமியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

பாசிக்குடா கடற்கரையில் சுனாமியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு