ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது சிலர் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்ததுடன் ஏனைவர்கள் தப்பி ஒட்டியுள்ளனர்.
குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் சம்பவ தினமான இன்று பகல் ஆலயத்தில் அன்னாதனம் வழங்கி கொண்டிருந்தபோது அதனை வாங்கி சாப்பிட்ட இளைஞன் ஒருவர் சாப்பாடு சரி இல்லை என தெரிவித்தபோது அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து 7 பேர் கொண்ட ஜயங்கேணி வாள்வெட்டுக்குழு, அன்னதானம் வழங்கயவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியதில் பெண்கள் உட்பட 4 பேரில் இருவர் ஏறாவூர் வைத்தியசாலையிலும் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தப்பி ஓடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவந்த பொலிஸார் இரண்டாவதாக மற்றுமொருவரை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.








