இலங்கையில் அதிகமான அளவில் ஏற்றுமதி திறன்கள் உள்ள போதிலும் அது உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.இதற்கமைய ஏற்றுமதி மூலம் பெறக்கூடிய கணிசமான வருவாயை இலங்கை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியின் வதிவிட பிரதி நிதி ஃபாரிஸ் ஹடாட் சேவோஸ் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலக்
கூறுகள் இருந்தும் அது உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை.இலங்கையின் மீட்சியை நோக்கிய பசுமை மீள்தன்மை மற்றும் அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் நடந்த கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பொருளாதாரத்தில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள இலங்கை, கடந்த ஒரு வருடகாலத்தில் சிறந்த முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது.கடந்த சில மாதங்களில் குறிப்பிட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை பெறும் தன்மையை இலங்கை கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சம்பந்தப்பட்ட
தரப்பினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உலக வங்கியின் வதிவிட பிரதிநிதி பாரிஸ் ஹடாட் சேவோஸ் வலியுறுத்தியுள்ளார்.