கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்ய கோரி மட்டு காந்தி பூங்காவில் கிரா உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையுடன் ஆர்பாட்டம்.
வாழைச்சேனையில் கடமை நிமித்தம் சென்ற கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும் சட்டத்தை அமுல்படுத்தாக பொலிசாருக்கு எதிராகவும் இன்று திங்கட்கிழமை (30) கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையுடன் கவனயீர்பு போராட்டம் காந்த பூங்காலில் ஆரம்பித்து பழயை கச்சேரிக்கு ஆர்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்
கடந்த 20 ம் திகதி கடமை நிமித்தம் வெளியில் சென்ற கிராம உத்தியோத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் இது வரை கைது செய்யாததையடுத்து மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் கவனயீர்பு ஆரப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு சுகயீன விடுமுறையுடன் மட்டு காந்தி பூங்காவில் கிராம உத்தியோகத்தர்கள் ஒன்று கூடினர்.
இதனையடுத்து நீதிவேண்டும், கைது செய் கைது செய், சமாதான அலுவல்களான எமக்கு என்ன பாதுகாப்பு, மக்கள் சேவையை செய்யும் எங்களை பொலிசார் ஏன் புறக்கணிப்பு, பொலிசாரின் நடவடிக்கை தான் என்ன? தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு நீதி வேண்டும், அரசகாணி அரச வளங்களை பாதுகாக்கும் எங்களை பாதுகாப்பது யார?, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்வர்கள் அங்கிருந்து ஊர்வலமாக நீதிமன்ற வீதி ஊடாக பழைய கச்சேரியை சென்றடைந்து அங்கு இடம்பெற்றுவரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தினையடுத்து அவர்களை வெளியில் பொலிசார் தடுத்து நிறுத்தியதுடன் மூட்டத்தில் சென்று மகஜரை கையளிக்க 5 பேரை அனுமதித்த தையடுத்து கூட்டத்திற்கு சென்று மாவட்ட அபிவிருத்திகுழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவிடம் மகஜர் ஒன்றை கையளித்ததனர்.
இது தொடர்பாக அவர் பொலிஸ் அத்தியட்சகரிடம் வினாவியதையடுத்து இன்று இருவரை கைது செய்துள்ளதாகவும் ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய பொலிசார் வலைவீசி தேடிவருவதாக தெரிவித்தார்
இதனையடுத்து ஏனையவர்களை உடனடியா கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்ததையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.
இதேவேளை கடந்த 23 ம் திகதி கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு கோரி கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பித்தக்கது.