இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டால் அதிலிருந்து மீட்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆயத்தமாக இருக்கின்றார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அனுபவம் இல்லாதவர்களிடம் நாட்டை ஒப்படைக்க, மக்கள் எடுத்த தீர்மானத்தினால் இன்று அவர்கள் பெரும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்பட முடியாது காணப்படும் அரசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டு பிரச்சினைகள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்தபோது இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த காலத்தில் அரிசிக்கான தட்டுப்பாடு இருக்கவில்லை எனவும் இலவசமாக மக்களுக்கு 20 கிலோ கிராம் எடையினுடைய அரிசி விநியோகம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல ஆயிரக் கணக்கான தொன் எடையுடைய அரிசி விநியோகம் செய்யப்பட்டதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆபத்து ஏற்பட்டால் அதிகாரம் இருந்தாலும் அதிகாரம் இல்லை என்றாலும் உதவுவதற்கு ரணில் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.