Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்க FAO ஒத்துழைப்பு!

இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்க FAO ஒத்துழைப்பு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து டிஜிட்டல் மயமாக்கும் செயற்திட்டத்திற்காக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (29) கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய அலுவலகத்தின் சிரேஷ்ட புள்ளியியல் நிபுணர் கலாநிதி சங்கீதா துபே உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்பகட்ட ஆய்வுகளின் முடிவுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, நாடு முழுவதும் பரந்துள்ள மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அடிப்படை உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்து, அவற்றை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றுவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறையின் எதிர்கால நடவடிக்கைகளை மிகவும் பயனுள்ள வகையில் திட்டமிடுவதற்கு, முன்னுரிமைத் தேவைகளை மதிப்பீட்டை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும், டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பாக அமைச்சு அடையாளம் கண்டுள்ள தேவைகள் குறித்தும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிடமிருந்து பெறக்கூடிய தொழில்நுட்ப  ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச, இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கபில பமுணு ஆரச்சி, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் நவ்ராஸ் நஸார் மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கு, நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் நமது மீன்பிடி சமூகத்திற்கு மேலும் திறம்பட  சேவையை வழங்குவதில் கடற்றொழில் அமைச்சு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!
செய்திகள்

பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!

October 31, 2026
வட்ஸ்அப் குழு மூலம் பல இலட்சம் மோசடி செய்த பெண் கைது
செய்திகள்

வட்ஸ்அப் குழு மூலம் பல இலட்சம் மோசடி செய்த பெண் கைது

October 31, 2026
7 வயதில் இலங்கையிலிருந்து படகில் இந்தியா வந்தவர்; 30 ஆண்டுகளாக அடையாளமின்றி தவிக்கும் இளைஞர்!
செய்திகள்

7 வயதில் இலங்கையிலிருந்து படகில் இந்தியா வந்தவர்; 30 ஆண்டுகளாக அடையாளமின்றி தவிக்கும் இளைஞர்!

October 31, 2026
பைனான்ஸ் நிறுவனத்தில் வரலாறு காணாத கிரிப்டோ கொள்ளை; 6.3 பில்லியன் டொலர் டிஜிட்டல் சொத்துக்கள் திருட்டு!
செய்திகள்

பைனான்ஸ் நிறுவனத்தில் வரலாறு காணாத கிரிப்டோ கொள்ளை; 6.3 பில்லியன் டொலர் டிஜிட்டல் சொத்துக்கள் திருட்டு!

October 31, 2026
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு ஐ.நா.வினால் 9 பரிந்துரைகள்!
செய்திகள்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு ஐ.நா.வினால் 9 பரிந்துரைகள்!

October 31, 2026
இந்தியாவின் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
உலக செய்திகள்

இந்தியாவின் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

October 31, 2026
Next Post
பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!

பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு