சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புக்களுக்கு மாணவர்களை அழைத்து வருவதற்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை உதாசீனம் செய்யும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாகாணத்தின் அனைத்து அதிபர்களுக்கும் புதிய சுற்றறிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த சுற்றறிக்கையை பொருட்படுத்தாமல் இவ்வாறான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் செயலாளரினால் இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறும் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கும் வகையில் சப்ரகமுவ மாகாண சபை தொலைபேசி இலக்கமொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
சப்ரகமுவ மாகாண சபையினால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு சுற்று நிருபங்களையும் பின்பற்றாத சில பாடசாலை ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் வகுப்பு மாணவர்களை தமது பயிற்சி வகுப்புகளில் பங்கேற்குமாறு அழுத்தம் கொடுப்பதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுஜானி ஆர். விஜேதுங்கவினால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், மாகாண கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பெற்றோர் விழிப்புணர்வு அறிவித்தலை ஒவ்வொரு பாடசாலையின் நுழைவாயிலிலும் காட்சிப்படுத்துமாறும் மாகாண கல்வி செயலாளர் அனைத்து அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்கவும், வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த முன்மொழிவுகள் கடந்த இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் முன்வைக்கப்பட்ட போது இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட ஆசிரியர்கள் பாடசாலையில் கற்பிக்கும் பாடத்திற்கு மாணவர்களை அழைத்து பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திஸாநாயக்க தெரிவித்தார்.
கடந்த இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கடந்த இரண்டு தடவைகள் கட்டண அடிப்படையில் நடத்தப்படும் தனியார் பயிற்றுவிப்பு வகுப்புகளுக்கு அழைப்பு விடுப்பதைத் தடைசெய்து சுற்றறிக்கை வெளியிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளின் அடிப்படையில் சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே இம்முறை இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு இந்த பிரேரணையை கொண்டு வந்தார்.
மத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலை ஆசிரியர்கள் தொடர்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்திலும் இதனை நடைமுறைப்படுத்துமாறு சபை உறுப்பினர் சப்ரகமுவ மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.
2016/08 மற்றும் 2022/5 மாகாணக் கல்விச் சுற்றறிக்கையின் பிரகாரம், மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அந்த உத்தரவுகளை அமுல்படுத்த வேண்டும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் இங்கு தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதிக்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டத்தை மீள்பரிசீலனை செய்து அமுல்படுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே இங்கு குறிப்பிட்டார்.