காலி சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு ஐஸ் மற்றும் புகையிலை கொண்டு வந்த கைதியின் நண்பர்கள் இருவரை நேற்று (31) காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைதி திருட்டு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,நேற்று மாலை மாம்பழங்களுடன் அவரைப் பார்க்க ரத்கமவைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் வந்துள்ளனர்.
சிறை அதிகாரிகள் மாம்பழத்தை சோதனையிட்டபோது, அதில் மெழுகினால் சுற்றப்பட்ட எட்டு கிராம் ஐஸ் மற்றும் 6 சிறிய புகையிலை துண்டுகள் இருப்பது தெரியவந்தது.