மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட விசேட பயிற்சி பெற்ற செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள 50 பேர் கொண்ட குழுவினர் தமது ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொண்டனர்.
நிரந்தர அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள இவர்களுக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரமவினால் வழங்கப்பட்டது.
இவர்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பயிற்சிகளை வழங்கியதுடன் அம்பாறை மோட்டார் போக்குவரத்து உதவி ஆணையாளரின் பரிந்துரையின் பேரில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சனத் பண்டார மற்றும் மோட்டார் போக்குவரத்து உதவி ஆணையாளர் ரொஹான் டி. டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.