Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொதுமக்கள் போக்குவரத்து முறைப்பாடுகளை பதிவு செய்ய செயலி அறிமுகம்

பொதுமக்கள் போக்குவரத்து முறைப்பாடுகளை பதிவு செய்ய செயலி அறிமுகம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸினால் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்த செயலி இன்று (01) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த செயலி மூலம் பொதுமக்கள், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து உடனடியாக முறைப்பாடு தெரிவிக்கலாம்.

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக E-servicesக்குள் பிரவேசிப்பதன் மூலம் e-Traffic கையடக்கத் தொலைபேசி செயலியை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இலகுவாகப் பதிவிறக்கம் செய்ய முடியும் என பொலிஸார் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக உங்களது முறைப்பாடுகளை உடனடியாக பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய 607 பொலிஸ் நிலையங்களில் போக்குவரத்து அதிகாரிகள் கடமையாற்றுவதுடன், இந்த e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்துவதன் மூலம் தினசரி வாகன விபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயலியில் உள்ள Camera option icon அல்லது Vedio option iconஐ பயன்படுத்துவதன் மூலம், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் வீதிகளில் இடம்பெறும் பிற சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த கணக்கு மூலம் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்ப முடியும்.

இவ்வாறு வழங்கப்பட்ட தகவல்களின்படி, போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மற்றும் பிற சம்பவங்களை விசாரணை செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்புவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

விசாரணைகளின் முன்னேற்றத்தை பொலிஸ் தலைமையகம் கண்காணிக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

6 மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

6 மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

October 6, 2026
“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
Next Post
மட்டக்களப்பு தொடக்கம் பேருவலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை

மட்டக்களப்பு தொடக்கம் பேருவலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு