Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு தொடக்கம் பேருவலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை

மட்டக்களப்பு தொடக்கம் பேருவலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய ,ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு,வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில், ஹம்பாந்தோட்டை , மாத்தறை ஊடாக பேருவலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான தரவு பதிவு ஞாயிற்றுக்கிழமை; அனைவருக்கும் அழைப்பு
செய்திகள்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான தரவு பதிவு ஞாயிற்றுக்கிழமை; அனைவருக்கும் அழைப்பு

July 7, 2026
”பேஸ்புக் புத்திசாலிகள் போராடும் களம் அல்ல- அதனால் நான் அங்கு இல்லை”; தயாசிரி ஜயசேகர
செய்திகள்

”பேஸ்புக் புத்திசாலிகள் போராடும் களம் அல்ல- அதனால் நான் அங்கு இல்லை”; தயாசிரி ஜயசேகர

July 7, 2026
மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை தீ பரவல்
செய்திகள்

மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை தீ பரவல்

July 7, 2026
நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு
செய்திகள்

நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு

July 6, 2026
இரத்தினபுரி பள்ளிவாயலின் உண்டியல் உடைத்து திருட்டு; திருடரை தேடும் பொலிசார்
செய்திகள்

இரத்தினபுரி பள்ளிவாயலின் உண்டியல் உடைத்து திருட்டு; திருடரை தேடும் பொலிசார்

July 6, 2026
சிறைச்சாலை மோதல் உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு; முழுப் பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
செய்திகள்

சிறைச்சாலை மோதல் உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு; முழுப் பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

July 6, 2026
Next Post
இலங்கை பிறப்பு விகிதத்தில் வீழ்ச்சி

இலங்கை பிறப்பு விகிதத்தில் வீழ்ச்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு