Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நா‌ள் இன்று

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நா‌ள் இன்று

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலையில் 2016ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நா‌ள் இன்று 02ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரையில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தலானது இராவணன் சேனா அமைப்பின் தலைவர் கு. செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த படுகொலை சம்பவமானது திருகோணமலை கடற்கரையில் வைத்து 02.01.2006 அன்று இடம்பெற்றது.

படுகொலை செய்தவர்கள் – இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை டொக்யார்ட் வீதி, பெரிய கடற்கரைச் சந்தியிலுள்ள காந்தி சிலைக்கு அருகாமையாக மாலைப் பொழுதில் தினமும் இளைஞர்கள் நின்று கதைப்பது வழக்கம். 02.01.2006 அன்றைய மாலைப் பொழுதும் மாணவர்கள் பலர் அவ்விடத்தில் கூடிநின்று கதைத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆட்டோ ஒன்றில் வந்த இனம் தெரியாத நபர்கள் அந்த இளைஞர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டுக் கோட்டைப் பக்கமாகச் சென்றனர். கைக்குண்டு வெடித்ததில் திருமலை புனிதஜோசப் கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என்பவர் காயமடைந்தார்.

இவரை ஏனைய மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

இதனால் கடற்கரையில் நின்ற மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத்தொடங்கினர். இதற்கிடையில் காயமடைந்த மாணவர்களுக்கு அருகில் விரைந்த கடற்படையினர் அவர்களை நிலத்தில் விழுத்தி கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

மாணவர்கள் இச்சம்பவம் பற்றி தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறியபோதும் மாணவர்களைச் சப்பாத்துக் கால்களால் மிதித்து முழங்காலில் நிக்க வைத்து சுட்டுக் கொன்றதாக அக்காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 05 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 05 மாணவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் விபரம்

  1. லோகிதராசா ரொகான்
  2. சண்முகராஜா சஜீந்திரன்
  3. மனோகரன் வசீகர்,
  4. தங்கத்துரை சிவானந்தன்
  5. யோகராஜா கேமச்சந்திரன் ஆகியோர்கள் ஆவர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த அமைப்பின் தலைவர் கு. செந்தூரன், அப்பாவி மாணவர்களின் படுகொலை கண்டிக்கத்தக்கது. இதனை சந்ததிகளுக்கு எடுத்து செல்லவே நினைவேந்தல் இடம் பெறுகிறது. இதனால் துயருற்றிருக்கும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவுகளுடன் இணைந்து நாங்களும் பங்கெடுக்கிறோம் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
Next Post
இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை; புத்திக்க சில்வா குற்றசாட்டு

இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை; புத்திக்க சில்வா குற்றசாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.