போலி நாணயத்தாள்களைத் தம்வசம் வைத்திருந்த நபர்கள் இருவர் முழங்காவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் தம் வசம் வைத்திருந்த போலி நாணயத்தாள்களை வைப்பு செய்ய முயற்சித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் 26 மற்றும் 61 வயதுடைய பூநகரி மற்றும் நச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (09) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








