ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் தலைவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் ஹிங்குரகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது, சந்தேகநபர்களிடமிருந்து 15 கிராம் ஐஸ் மற்றும் 12 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரு சந்தேகநபர்களும் ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபரின் மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர்களிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








