Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய இராணுவத் தளபதி வழங்கியுள்ள அதிரடி உத்தரவு

புதிய இராணுவத் தளபதி வழங்கியுள்ள அதிரடி உத்தரவு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிக பாதுகாப்புப் படைத் தளபதிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் சேகரிக்கப்பட்ட தகவலின் பிரகாரம், காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 451 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​3570 கிலோ கஞ்சா, 1040 கிலோ கேரள கஞ்சா, சுமார்11 கிலோ ஐஸ் மற்றும் 61 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், சுமார் 850 லீற்றர் சட்டவிரோத உள்நாட்டு மதுபானம் மற்றும் 15000 லீற்றர் கோடா மற்றும் 68 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 7340 கிலோ பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டன.

இராணுவத்தினரால் சேகரிக்கப்பட்ட புலனாய்வு தகவலின்படி, காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ​​கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, கொள்ளுப்பிட்டி, நீர்கொழும்பு மற்றும் வெல்லவீதிய பிரதேசங்களில் சுமார் 170,000 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், யால காப்புக்காடு, உடவலவ பிரதேசங்களில் கிட்டத்தட்ட 3459 கிலோகிராம் கஞ்சாவும் 440,000 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்

நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.