கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் வீடமைப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுடன் தொடர்புடைய திட்டங்களை முன்னெடுப்பதில் வீடமைப்பு அதிகார சபை முக்கிய பங்காற்றி வரும் நிலையில், புதிய உறுப்பினராக சந்திரா டிசோ இணைந்து செயற்படவுள்ளார்.
வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இவரது நியமனம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.








