மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவங்களில், பலியான 27 ஆப்பிரிக்க குடியேறிகளின் உடல்களை,துனிசியாவின் கடலோர காவல்படை நேற்று மீட்டுள்ளதுடன் 87 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐரோப்பாவை நோக்கி பயணித்த போது, ஆப்பிரிக்க குடியேறிகள் அடிக்கடி பயன்படுத்தும் இடமான ஸ்ஃபாக்ஸ் நகருக்கு அருகில் படகுகள் மூழ்கியுள்ளன.
முன்னதாக கடந்த மாதமும் இதுபோன்ற சம்பவம் ஒன்றில் 30 குடியேறிகளின் உடலங்களை அதிகாரிகள் மீட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துனிசியா, முன்னோடியில்லாத வகையில் இடம்பெயர்வு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், பலரும் அங்கிருந்து ஆபத்தான பயணங்கள் மூலம் ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.