சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம், நேற்றையதினம்(02) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயலுக்கு பசளை இடச் சென்றவர்கள் மேற்படி சடலத்தை கண்ட நிலையில், இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.