Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வித்தியானந்த கல்லூரி அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்

வித்தியானந்த கல்லூரி அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (03) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர் கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைப்பதாகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்கள் இணைந்து இன்றையதினம் காலை 7.30 மணியளவில் பாடசாலை நுழைவாயிலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டமானது, 14 ஆசிரியர்களுக்கு அண்மையில் அவர்களுக்கான பதிலீடு இன்றி, தனிப்பட்ட பழிவாங்கல் நோக்கில், இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்தமை, இவரது பொறுப்பற்ற வார்த்தை பிரயோகங்கள், தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக இவர் பாடசாலையை பொறுப்பேற்கும் போது இருந்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி (83 ஆசிரியர்களிலிருந்து 63 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது) ஏற்பட்டுள்ளது.

இவரால் பாடசாலையின் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலையின் அகச்சூழல் சீரின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளது. பாடசாலை சொத்துகளை பாதுகாப்பது மற்றும் அது தொடர்பான வெளிப்படை தன்மை இல்லாது உள்ளது. (தொழில்நுட்ப ஆய்வுகூட பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் கல்வித்திணைக்கள விசாரணைகள் நடைபெறுகின்றன) அதிபர் மீதான நிதிமோசடி விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

குறித்த விடயங்கள் தொடர்பாக அதிபருடன் பல தடவைகள் SDS/ OBA இணைந்து நடத்திய கலந்துரையாடல்களில் மேற்கொண்ட தீர்மானங்கள், ஆலோசனைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றிதனமான அதிபரின் செயற்பாடுகளால் மாணவர் கல்வி பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக உயர்தர மாணவர்களுக்கு சில பாடங்களுக்கு பொருத்தமான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. பல பாட வேளைகளில் வகுப்புகள் நடைபெறுவதில்லை. இவ்வாறான காரணங்களாளே குறித்த போராட்டம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அதிபர் தொடர்பான விடயங்கள் இரு செயலாளர்களாலும் வலயகல்விபணிப்பாளர், செயலாளர் கல்வி அமைச்சு, பிரதிக் கல்விப்பணிப்பாளர் – தேசிய பாடசாலை, கல்வி அமைச்சு என்பவற்றிற்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் மூலமும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையிலே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்ட இடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் குறித்த போராட்டத்திற்கான காரணங்களை கேட்டறிந்திருந்தார். அதன்பின்னர் போராட்டத்திற்கான காரணம் தொடர்பான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இது ஒரு தேசிய பாடசாலை ஆகையினால் மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் தான் இருக்கின்றது. எனவே மத்திய அரசின் கல்வி அமைச்சின் செயலாளருக்கு இந்த மகஜரை அனுப்புவதாகவும், அதன் பிரதியை சம்பந்தப்பட்ட அரச அலுவலகங்களுக்கு வழங்கி இதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்திருந்தார்.

குறித்த போராட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!
செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!

September 20, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!

September 20, 2026
‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
Next Post
தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.