மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலய குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையிலான சபரிமலை யாத்திரைக் குழுவினர், ஐயப்ப சுவாமியை தரிசிக்க நேற்று (04) இந்தியா புறப்பட்டனர்.
இதற்காக ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்றது.
உறவுகளின் ஆசிர்வாதத்துடன் பாத பூசைகள் நடைபெற்று, இருமுடி சுமந்து ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மனை தரிசித்து அங்கிருந்து புறப்பட்டனர்.
எதிர்வரும் சில தினங்களில் இந்தியா சென்று அங்கு தரிசனம் செய்து ஜோதி பூசையை கண்டவுடன் மீண்டும் இலங்கை வந்தடைவர். இக் குழுவில் ஆண்கள் பெண்கள் என இரு பலாரும் அடங்குகின்றமை குறிபிடத்தக்கது.