கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 12,140 பேர், வீதி விபத்துகளில் இறந்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் திணைக்களத்தின் வீதி பாதுகாப்பு இயக்குநர் எச்.ஏ.கே.ஏ. இந்திக ஹபுகோடவின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட ஆய்விலிருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், பொதுமக்கள் சாலைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இறப்புகளைக் குறைக்க போக்குவரத்துச் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பொலிஸ் தரப்பு கோரியுள்ளது.
அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை திட்டத்தின்கீழ் விபத்துக்களை தடுக்கும் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.