இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள சந்தையில் பூனை, நாய் இறைச்சியின் விற்பனைக் குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த சந்தையில் பூனை, நாயுடன் வௌவால், எலி, பாம்பு, குரங்கு ஆகியவையும் விற்கப்பட்டு வந்தன.இந்தோனேசியாவில் பூனை, நாய் இறைச்சியின் வர்த்தகத்தை நிறுத்தியிருக்கும் முதல் சந்தை இது என்று விலங்கு உரிமை அமைப்பு தெரிவித்தது.இந்த தடை மூலம் பல்லாயிரம் விலங்குகள் காப்பாற்றப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
குறித்த சந்தையில் விலங்குகள் அடிக்கப்பட்டும் சுடப்பட்டும் கொல்லப்பட்டதுடன், உயிருடன் இருக்கும்போதே அவற்றின் உரோமம் எரிக்கப்பட்டதாகவும் விலங்குநல ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.உலகில் நாய், பூனை இறைச்சியின் விற்பனையை அனுமதிக்கும் ஒரு சில நாடுகளில் இந் தோனேசியாவும் ஒன்றாகும்.