யாழ் கோப்பாய் பகுதியில் ஒரு வயது குழந்தை ஒன்று குளிர்பான போத்தலிலிருந்த மண்ணெண்ணெய் குடித்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தர்ஷிதன் சஸ்வின் என்ற ஒரு வயது மற்றும் இரண்டு மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாய் சமையல் செய்து கொண்டிருந்தபோது சமையலறைத் தரையிலிருந்து மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து குடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் தனது குழந்தையைப் பரிசோதித்தபோது, குழந்தையின் வாயிலிருந்து மண்ணெண்ணெய் வாசனை வருவதைக் கவனித்ததாகவும், பின்னர் மயக்கம் ஏற்பட்டதால் தாய் குழந்தையை சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.