யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூரிலிருந்து சுண்ணாக நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்துக்கு காரணமான வாகன சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.