கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 10வது மைல்கல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சாலையை விட்டு விலகி அதன் முன் பகுதி ஒரு பாறையிலிருந்து சரிந்து நின்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து இன்று(11) காலை 6:30 மணியளவில் நிகழ்ந்ததாகவும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.