Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு கிழக்கில் 16 ஆம் திகதி வரை மழை; வெளியான தகவல்

வடக்கு கிழக்கில் 16 ஆம் திகதி வரை மழை; வெளியான தகவல்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கிடையில் மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்று(11) மதியம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வங்காள விரிகுடாவில் கடந்த 07 ஆம் திகதி அன்று உருவாகிய காற்றுச் சுழற்சியின் நகர்வு வேகம் மிக மிக குறைவாகவே உள்ளது.

இதன் காரணமாக மழை நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே,தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கிடையில் மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.

கடந்த சில நாட்களாக குறிப்பாக 07ஆம் திகதி யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி, 08 ஆம் திகதி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை,9 ஆம் திகதி அம்பாறை மற்றும் மட்டக்களப்பு 10 ஆம் திகதி வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு கிடைத்த மழை, இன்று மாலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலடையும்.

அதேவேளை மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே அறுவடைச் செயற்பாடுகளில் ஈடுபடும் விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.

வடக்கு, கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு கடற்பகுதிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 17, 2026
இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!
செய்திகள்

இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!

September 17, 2026
Next Post
இனி அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்பட மாட்டாது; ஆர்.எம். ஜயவர்தன

இனி அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்பட மாட்டாது; ஆர்.எம். ஜயவர்தன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு