அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு அரச அதிகாரிக்கும் இலஞ்சம் வழங்க வேண்டாம் என்றும், அரசியல்வாதிகளுக்கு பணம் அல்லது பரிசுகள் வழங்க வேண்டாம் என்றும் அமைச்சர் கே.டி. லால்காந்த பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
சில அரச அதிகாரிகள் கோப்புகளை மறைத்து வைத்து, பணம் பெற்ற பின்னரே சேவைகளை வழங்கும் நிலைமை இன்னும் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறானவர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.







