Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு இல்லை; சர்வ கட்சி மாநாட்டில் ஜனாதிபதி!

சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு இல்லை; சர்வ கட்சி மாநாட்டில் ஜனாதிபதி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26.07.2023) மாலை 5.30 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இதில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

13 ஆம் திருத்தம் என்பது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் தனக்கு மாத்திரமன்றி முன்பு இருந்த எந்த நிறைவேற்று ஜனாதிபதிக்கும் இருக்கவில்லை.

அதற்கான முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உரியது. நாட்டு நலனுக்காக யோசனையை முன் வைப்பது மட்டுமே எனது பணி.

மேலும் அவர் ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்கள் என்றும்,

எதிர்காலத்தில் மாகாணசபை முறைமையை நீடிக்க வேண்டுமானால் தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது

முதல் பட்டியலில் உள்ள, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பல விடயங்கள் மத்திய அரசின் கீழ் இருக்கின்றன.

எனவே அந்த அதிகாரங்களைப் போன்றே விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் கீழ்மட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இ.தொ.க பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சீ.வி விக்னேஷ்வரன், சாகர காரியவசம், டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, கெவிது குமாரதுங்க, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, வண. அத்துரலியே ரதன தேரர், வீரசுமன வீரசிங்க, அநுர பிரியதர்சன யாப்பா, லக்‌ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ
செய்திகள்

கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ

May 18, 2025
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு

May 18, 2025
மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு
செய்திகள்

மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு

May 18, 2025
தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்பேத்தாழை பஸ்தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
காணொளிகள்

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்பேத்தாழை பஸ்தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

May 18, 2025
மே18 நினைவு நாளை வெற்றி நாளாக பிரகடனப்படுத்தும் நாமல்
செய்திகள்

மே18 நினைவு நாளை வெற்றி நாளாக பிரகடனப்படுத்தும் நாமல்

May 18, 2025
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும்; மஹிந்த ராஜபக்ஸ
செய்திகள்

நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும்; மஹிந்த ராஜபக்ஸ

May 18, 2025
Next Post
வடகிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டம்; யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் ஆதரவு!

வடகிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டம்; யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் ஆதரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு