Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிமன்றத்திற்கு நடந்து செல்லும் அரசியல்வாதி தீர்ப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது இனி நடக்காது; சுனில் வட்டகல

நீதிமன்றத்திற்கு நடந்து செல்லும் அரசியல்வாதி தீர்ப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது இனி நடக்காது; சுனில் வட்டகல

5 months ago
in செய்திகள்

சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் சிறைச்சாலையில் இருக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 12 (1) பிரிவின் பிரகாரம் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் நீதிமன்றத்துக்கு நடந்து செல்லும் அரசியல்வாதி, நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் சிறையில் இருக்க வேண்டும். அதனை விடுத்து வைத்தியசாலைகளில் சுகபோகமாக இருக்க முடியாது.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர் அரசியல் அணுசரணையுடன் வைத்தியசாலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.

எவருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது. ஒருசில கைதிகள் பல மாதகாலமாக வைத்தியசாலையில் இருப்பது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

மேலும் ஒரு தரப்பினர் தங்களின் அரசியல் இலாபத்துக்காக க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மக்களும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்தி எமக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கமைவாகவே செயற்படுவோம். என தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

June 9, 2025
பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
செய்திகள்

பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

June 9, 2025
பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்
செய்திகள்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

June 9, 2025
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு
செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

June 9, 2025
323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்
செய்திகள்

323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்

June 9, 2025
கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

June 9, 2025
Next Post
காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு