மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் ஆருத்ரா அபிசேக திருவிழா நேற்று (12 ) இடம்பெற்றது.
மார்கழி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரதங்களுள் ஒன்றாக காணப்படும் திருவெம்பாவை விரதத்தின் தீர்த்தோற்சவத்திற்கு முதல் நாளாக இந்த ஆருத்ரா அபிசேக திருவிழா இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு ( 12 ) ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து நடராசா மூர்த்தியோடு சேர்ந்த சிவகாமி அம்பாள் சமதேரராய் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பின்னர் உள் வீதி உலா வருதல் நிகழ்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று ( 13 ) அதிகாலையில் விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து, நடராசா மூர்த்தியோடு சேர்ந்த சிவகாமி அம்பாள் சமதேரராய் தீர்த்த உற்சவத்துக்கு புறப்பட்ட எம் பெருமானுக்கு, ஆருத்ரா தரிசனம் எனப்படும் சமுத்ரா தீர்த்தோற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இவ் ஆலயத்தில் திருவெம்பாவை காலத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆலய கிரியை ,பூஜை வழிபாடுகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நவரத்ன முரசொலி மாறன் குருக்கள் தலைமையிலான குருமாரினால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.