வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (13) முற்பகல் வேளையில் நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவு சென்னக்கிராமம் பகுதியில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த போது மலையடிக்கிராமம் 03 பகுதியில் வசித்த (வயது 60) நபரே இவ்வாறு மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.