மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் இன்று (14) இரவு மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் வேன் ஒன்று கோட்டைக்கல்லாறு பகுதியில் வயதான பெண் ஒருவரை மோதிய நிலையில் சாரதி தப்பி சென்றுள்ளார்.
குறித்த முதியவர் கோட்டைக்கல்லாறு புத்தடிக்கோயிலுக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த குறித்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வேனின் சாரதி வேனைக் கைவிட்டு தப்பி ஒட்டியுள்ள நிலையில், அவ்விடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.