சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் சிகிரியாவிற்கு நேற்று (14) சுற்றுலா சென்றிருந்த போது, ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் சீகிரியா – கிம்பிஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், செக் குடியரசைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.