கொட்டாஞ்சேனையில் ஒரு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கணித ஆசிரியர், மத்திய கொழும்புக்கான தேசிய மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (08) நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அவர் ஒரு தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அடக்க முயற்சிக்கிறதா என அவர்கள் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் மன நலம் குறித்து எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும் என அவர் சந்தேகம் வெளியிட்டதுடன் சிறுமியின் மரணத்திற்கு தாமதிக்காது நீதியை பெற்றுத்தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சபையில் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.