பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது இன்று (6) அதிகாலை கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள வீட்டில் அவர் இருந்தபோது அடையாளம் தெரியாத கொள்ளையனால் தாக்குதலுக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்ததால் அவர் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.