கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அவதூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நாமல் குமாரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் (15) வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நாமல் குமார கோட்டை பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் நாமல் குமாரவின் சுகவீன நிலை குறித்து அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்த நிலையில், அவருக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்க சிறைச்சாலை நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நாமல் குமார மற்றும் இன்னொரு சந்தேக நபரின் தொலைபேசி அழைப்பு விபரங்களைப் பெற்றுக் கொள்ள பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.