Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிகழ்த்திக்காட்டிய இஸ்ரோ; இந்தியாவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி

நிகழ்த்திக்காட்டிய இஸ்ரோ; இந்தியாவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

விண்வெளியில் 2 விண்கலன்களை டாக்கிங் முறையில் இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி பெற்றதாக விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.

விண்வெளியில் 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பிஎஸ்எல்வி சி60 ரொக்கெட் மூலம் அனுப்பப்பட்ட 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன என இஸ்ரோ அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைத்த 4ஆவது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.

1.5 கிலோ மீற்றர் இடைவெளியில் இருந்த செயற்கைக்கோள்கள் 50 மீற்றராகவும், பிறகு 15 மீற்றராகவும், இறுதியில் 3 மீற்றராகவும் குறைத்து இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.

இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ரொக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. அதன்பின் அவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வந்தன.

இரட்டை விண்கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்டவையாகும். இரு விண்கலன்களுக்கு இடையேயான தொலைவை 20 கிலோ மீற்றரில் இருந்து படிப்படியாக குறைத்து அவற்றை ஜனவரி 9ஆம் திகதி ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது.

அதற்கேற்ப விண்கலன்களின் தூரத்தை குறைக்க முயற்சிகள் செய்யப்பட்டன. அப்போது விண்வெளியில் புறச்சூழல் காரணமாக விண்கலன்களின் இயக்கத்தின் வேகம் எதிர்பார்த்ததை விட குறைந்துவிட்டது. இதனால் திட்டமிடப்பட்டிருந்த விண்கலன்கள் ஒருங்கிணைப்பு நிகழ்வு தாமதம் ஆனது. அதன்பின் புறச்சூழல் காரணிகளுக்கு தீர்வு காணப்பட்டு விண்கலன்களை நெருக்கமாக கொண்டு செல்லும் பணிகள் ஜனவரி 10ஆம் திகதி மாலை தொடங்கப்பட்டன.

அதன்படி முதலில் விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 1.5 கிலோமீற்றராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டுக்கும் இடையேயான தொலைவானது சீரிய இடைவெளியில் 500 மீற்றர், 230 மீற்றர், 105 மீற்றர், 15 மீற்றர் என படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இறுதியாக இரு ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் 3 மீற்றர் அளவில் மிக நெருக்கமாக கொண்டுவரப்பட்டன. இதையடுத்து ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களின் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த திட்டம் வெற்றி பெற்ற தன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்வெளியில் விண்கலன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 8, 2026
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

September 8, 2026
அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!

September 8, 2026
2018இல் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை வழக்கு; மனைவியைக் கைது செய்த சி.ஐ.டி!
செய்திகள்

2018இல் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை வழக்கு; மனைவியைக் கைது செய்த சி.ஐ.டி!

September 8, 2026
வறட்சியான வானிலையால் 35,169 குடும்பங்கள் பாதிப்பு; குடிநீர் விநியோகம் தீவிரம்
செய்திகள்

வறட்சியான வானிலையால் 35,169 குடும்பங்கள் பாதிப்பு; குடிநீர் விநியோகம் தீவிரம்

September 8, 2026
Next Post
நுளம்புக்கு புகை மூட்டிய சமயம் ஆடையில் தீப்பிடித்து முதியவர் உயிரிழப்பு

நுளம்புக்கு புகை மூட்டிய சமயம் ஆடையில் தீப்பிடித்து முதியவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.